புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேட்டையன் லுக்கில் மிரட்டும் ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’ படத்தின் வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜூலை 2023, 7:26 am

DIN

‘சந்திரமுகி 2’ படத்தின் வேட்டையன் கதாபாத்திர லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வருகிறது. இதனையும் முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார். மேலும் படத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் டப்பிங் முடித்ததாக படக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் வேட்டையன் கதாபாத்திர லுக்கை அறிவித்தபடியே படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. ‘சந்திரமுகி 2’ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.