நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் காதுகுத்து: பிரபல நடிகர் நெகிழ்ச்சி தகவல்!

நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் காதுகுத்து: பிரபல நடிகர் நெகிழ்ச்சி தகவல்!

நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடியில் உட்கார வைத்து காதுகுத்த வேண்டும் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றது.

தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், நடிகர் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்பட ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டு பேசினார்.

அந்தப் பேட்டியில் நடிகர் சந்தானம், "வல்லவன் திரைப்படத்தில் இருந்தே எனக்கு நயன்தாரா நல்ல பழக்கம். என்னை அண்ணா என்றே கூப்பிடுவார். நானும் தங்கச்சினு தான் கூப்பிடுவேன். ஒருநாள் நயன்தாரா வீட்டுக்கே போனபோது, அவங்க குழந்தையிடம் மாமா வந்திருக்காருனு சொன்னார். நானும் உங்க குழந்தைகள் 2 பேருக்கும் என் மடியில் வைத்து காது குத்தனும்னு சொன்ன. அவங்களும் சீர்வரிசை எல்லாம் பண்ணனும்னு கலகலப்பாக பேசினாங்க" எனத் தெரிவித்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குறித்து நடிகர் சந்தானம் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com