கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்?

நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2023, 7:42 am

நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

இதில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல். 

முதலில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வைக்க நடிகர் விக்ரமிடம் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் ரூ.50 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்தும் விக்ரம் மறுத்ததாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க  நடிகர் அர்ஜுனிடம் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அர்ஜுன்  நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.