புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நடிகர் கமல் - இயக்குநர் வினோத் - விவசாயிகள் சந்திப்பு: காரணம் என்ன?

நடிகர் கமல்ஹாசனோடு இயக்குநர் வினோத் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

News image
Updated On :12 ஜூன் 2023, 3:50 pm

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த ‘விக்ரம்’ படம் பெரு வெற்றி பெற்றதால் அவரது இந்தியன் 2 மீண்டும் படப்பிடிப்பு துவங்கி பரப்பரப்பாக நடைபெற்றது. அஜித்துடன் துணிவு திரைப்படத்திற்குப் பிறகு வினோத் இன்னும் புதிய படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. 

Story image

கமல் மணிரத்னம் உடன் இணைந்து நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. 

Story image

இந்நிலையில் கமல், இயக்குநர் வினோத் சந்தித்த் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை நிற்பேன் என ம.நீ.ம. கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

Story image

ஜீன்16,17இல் நடைபெறும் தேசிய நெல் திருவிழா நிகழ்வில் கலந்து கொள்ள நெல் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் சந்தித்தாக தெரிகிறது. படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 152வது படமாகவும் கமலின் 233வது படமாகவும் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.