மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போர் தொழில் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2023, 10:14 am

போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்களிடம் ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இன்று இப்படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலன், உலகளவில் இப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து 2023 ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் வரிசையில்  இடம்பெற்று அசத்தியுள்ளது. 

இதில் காவலதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் நடித்துள்ளனர்.  நிகிலா விமலும் சிறப்பாக நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா, ஆல்பிரட் பிரகாஷ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.