ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் த்ரிஷா!

நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை த்ரிஷா.

News image
Updated On :30 ஜூன் 2023, 6:59 am

DIN

நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை த்ரிஷா.

கடந்த 21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வரும் த்ரிஷாவுக்கு 40 வயதாகிறது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.

விஜய்யின் லியோ படத்தில் ஒப்பந்தமாகி தற்போது படப்பிடிப்பில் பிஷியாக இருக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டாரானா சிரஞ்சீவியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.