மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கல்லூரி ஆண்கள் விடுதியிலும்... 'எதிர்நீச்சல்' தொடருக்கு குவியும் பாராட்டு!

வீட்டில் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஆண்களுக்கான பாடமாக இருக்கும் தொடர் கல்லூரி ஆண்கள் விடுதியிலும் ஒரு எபிஸோடு விடாமல் ஓடுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

News image
Updated On :1 மார்ச் 2023, 12:49 pm

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

வீட்டில் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்ற ஆண்களுக்கான பாடமாக இருக்கும் தொடர் கல்லூரி ஆண்கள் விடுதியிலும் ஒரு எபிஸோடு விடாமல் ஓடுவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக மாலை நேரங்களில் ஒளிபரப்பாகும் பிரைம் டைம் தொடர்களுக்கு அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது.

அந்தவகையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

பழமைவாதத்தை கடைபிடிக்கும் நபர்களுக்கு கதாபாத்திரங்கள் மூலம் அறிவுரை கூறும் வகையில் இந்தத்தொடர் அமைந்துள்ளது. 

பெண்கள் கல்வி, சுதந்திரம் உள்ளிட்டவற்றை கதையின் வாயிலாக கொண்டு சேர்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இந்தத் தொடரில் ஜனனி என்ற பாத்திரத்தில் மதுமிதா நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து, மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, ஜி. மாரிமுத்து, சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

கடந்த 2022 முதல் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு குடும்பத் தலைவிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் ரசிகர்களாக உள்ளனர். 

Story image

கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரை இயக்குகிறார். கோலங்கள் தொடரில் ஆர்த்தி பாத்திரத்தில் நடித்த, ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியான எதிர்நீச்சல் தொடரின் முன்னோட்ட (புரோமோ) விடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

Story image

அதில், ஆண்கள் விடுதியிலும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரே தொடர் எதிர்நீச்சல்தான் எனக் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், மிகவும் பிடித்த பாத்திரங்களைக் குறிப்பிட்டு எதிர்நீச்சல் தொடரைப் பலர் பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.