ஷாருக்கானின் பதான் திரைப்படம் தற்போது மேலும் சாதனையை தனதாக்கியுள்ளது.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
இதையும் படிக்க- ரூ. 100 கோடி வசூலித்து சாதனைப் படைத்த 'வாத்தி'
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை அளித்துள்ளனர். ஏற்கெனவே இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்து சாதனைப் படைதிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பதான் திரைப்படம் தற்போது மேலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இத்திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.526 கோடி வசூலித்து, அதிக வசூலை பெற்ற பாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் ரூ.510 கோடி வசூலித்து இந்த சாதனையை தக்க வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பம் தரும் தினப்பலன்!

பாஜகவின் கடும் சவாலை எதிா்கொள்ளும் திமுக

சிதம்பரம் தொகுதி நிலவரம்: தில்லையை தக்க வைக்குமா அதிமுக- இருமுனை போட்டியில் வெல்லப்போது யாா்?
வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


