மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

”கண்ணை நம்பாதே” படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு

உதயநிதி நடிக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தின் 'குரு குரு' பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. 

News image
Updated On :6 மார்ச் 2023, 9:09 am

DIN

உதயநிதி நடிக்கும் 'கண்ணை நம்பாதே' படத்தின் 'குரு குரு' பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. 

உதயநிதி நடிப்பில் மார்ச் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் 'கண்ணை நம்பாதே'. இதில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் மு.மாறன் படத்தை இயக்கியுள்ளார். 

சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் படத்தை லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ளார்.

படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் நிறைந்தவையாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில் 'கண்ணை நம்பாதே' படத்தின் 'குரு குரு' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.