‘தபுவை காதலிக்கிறேன்...’- நடிகை தமன்னா அதிரடி கருத்து! 

நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகை தபு மீது தனக்கு காதல் உள்ளதென கூறியுள்ளார். 
‘தபுவை காதலிக்கிறேன்...’- நடிகை தமன்னா அதிரடி கருத்து! 
Published on
Updated on
2 min read

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு புகழை தந்தது. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் நடித்துவருகிறார்.  

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. லஸ்ட் ஸ்டோரி 2 படத்திலும் நடிக்க உள்ளார். 

தற்போது போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவுயுடன் நடித்து வருகிறார். தமன்னா எப்போதும் உடலை சரியாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பவர். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர். 

தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு தெலுங்கு, ஹிந்தியிலும் அதிக படங்களில் வந்தார். அவருக்கு 50 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் தபுவின் அழகு குறையவில்லை என்று அவரது ரசிகர்கள் வியக்கிறார்கள். விசால் பரத்வாஜ் இயக்கத்தில் குபியா படத்தில் நடித்துள்ளார்.இது விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகுமென சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமன்னா ஒரு நேர்காணலில் கூறியதாவது: 

விஜய் வர்மாவுடன் காதலா எனக் கேட்கிறீர்கள்? நாங்கள் ஒன்றாக படம் நடித்தோம். ஆனால் இது குறித்த வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டியதில்லை. சொல்வதற்கும் வேறெதுவுமில்லை. 

எனக்கு கரீனா கபூர், தபு ஆகியோரை மிகவும் பிடிக்கும். குறிப்பாக தபுவை மிகவும் பிடிக்கும். அவரை காதலிக்கிறேன். பெண்கள் இது மாதிரி இருக்க வேண்டும். இந்த வயதிலும் அழகாக இருக்க வேண்டும். நடிகைகளுக்கு இவர்களாகவே திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடிகைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதுமாதிரி எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துள்ளார்கள். உணமையிலேயே எனக்கு திருமணம் நடந்தாலும் யாரும் நம்பமாட்டார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com