ரஜினி படத்தில் செந்தில்!
ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ரஜினிகாந்த்தின் புதிய படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவருடைய 170-வது படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தில் ‘தங்கலான்’ படப்பிடிப்பு
இந்நிலையில், லால் சலாம் படப்பிடிப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படையப்பா படத்தில் இடம்பெற்ற ரஜினி - செந்தில் நகைச்சுவைக் காட்சி இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...