மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன்: ரசிகர்கள் ஆர்வம்!

சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பு குறித்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 10:40 am

DIN

சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பு குறித்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

90களின் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களாக இருந்தாலும் சரி அல்லது சமீபத்திய தொடர்களாக இருந்தாலும் சரி, சில தொடர்கள் மறக்க முடியாததாக உள்ளது.  சமீபத்தில்,   ரசிகர்கள் எந்த தொடரின் புதிய சீசனை விரும்புகிறார்கள் என்பதை கண்டறிய தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பை நடத்தியது. 

இந்த கருத்துக்கணிப்பில், நகைச்சுவை தொடரான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' அதிக வாக்குகளைப் பெற்றது.

இன்ஸ்டாகிராமில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், ரசிகர்கள் தாங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தொடரின் புதிய சீசனை  தேர்ந்தெடுக்கும்படி கேட்டுகொள்ளப்பட்டனர். அதில், 'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'சித்தி', 'கனா காணும் காலங்கள்', 'சரவணன் மீனாட்சி' ஆகிய விருப்பங்கள் கொடுக்கப்பட்டன.

வாக்கெடுப்பில், 44%  ரசிகர்கள் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா'வை மீண்டும் பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர். 31% பேர் 'சித்தி'க்கு வாக்களித்தனர், 13% பேர் 'கனா காணும் காலங்கள்' மற்றும் 12% பேர் காதல் தொடரான 'சரவணன் மீனாட்சி'யின் அடுத்த சீசனை பார்க்க விரும்புவதாக தெரிவித்தனர்.

சின்ன பாப்பா பெரிய பாப்பா  நகைச்சுவை தொடராகும். இது மே 2000 இல் ஒளிபரப்பானது. இந்தத் தொடரில் ஸ்ரீப்ரியா, கல்பனா, சீமா, நளினி மற்றும் நிரோஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மோகன் ராமன், விஜய சாரதி, டெல்லி குமார், சாம்ஸ், வாசு விக்ரம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் தொடரை எஸ்.என்.சக்திவேல், சுகி மூர்த்தி மற்றும் எம்.ஏ.மணி எழுதி இயக்கியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.