வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கஸ்டடி படத்தின் டிரைலர் வெளியீடு எப்போது தெரியுமா?  

நாக சைதன்யா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 மே 2023, 3:55 pm

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அர்விந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர். 

2023ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் க்ளிம்ஸ் விடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தது படக்குழு. 

Story image

தற்போது மே 5ஆம் தேதி டிரைலர் வெளியாகுமென தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.