பிரபல சீரியல் ஜோடி விஷ்ணு காந்த் - சம்யுக்தா விவகாரத்து செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணு காந்த் திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்து செய்யவுள்ளதாக, தற்போது சமூக வலைதளங்களில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணு காந்த் - சம்யுக்தா இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் சேர்ந்து நடித்தனர். விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா தங்கள் காதல் செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
அதன் பின்னர், கடந்த மாதம் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.
விஷ்ணு காந்த் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "மௌனம் வெறுமையல்ல, அது "உண்மை" மற்றும் "பதில்" நிறைந்தது.." என்று தெரிவித்துள்ளார். எனினும் விவாகரத்து குறித்து அவர்கள் இருவரும் எந்த கருத்தும் அதிகார்வபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மத்திய பிரதேசம்: பிரசவ அறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு!

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



