மிரட்டலான தோற்றம்.. லியோவில் இணைந்த அர்ஜுன்!

லியோ படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிரட்டலான தோற்றம்.. லியோவில் இணைந்த அர்ஜுன்!

லியோ படப்பிடிப்பில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன்  ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இந்நிலையில், இப்படப்பிடிப்பில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அர்ஜுன் கலந்துகொண்டதாக தகவல் பரவி வருகிறது. ஒருபக்க முகம் சிதைந்தது போன்று அர்ஜுனுக்கு மேக்கப் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com