25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் படத்தில் ஜோதிகா!
நடிகை ஜோதிகா, நடிகர் மாதவன் நடிக்கும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.


நடிகை ஜோதிகா, நடிகர் மாதவன் நடிக்கும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பின் நடிகை ஜோதிகா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், நடிகர்கள் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் உருவாகும் திரில்லர் படமொன்றில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: வெங்கட் பிரபு படத்தில் விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?
பாலிவுட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'டோலி சாஜா கே ரஹ்னா’ படத்தில் நாயகியாக ஜோதிகா அறிமுகமானார். தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட் சினிமாவிற்குச் சென்றுள்ளார் ஜோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...