கமல் - சிம்பு திடீர் சந்திப்பு!
கமல்ஹாசனை சிம்பு திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.


நடிகர் கமல்ஹாசனை சிம்பு திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, இப்படத்தினை இயக்க உள்ளார்.
சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனை சிம்பு, இயக்குநர் தேசிங்கு பெரியசாமி திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றத் தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சிம்பு 48 படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும், இப்படம் சிம்புவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...