பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் மோதும் கார்த்தி!

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலானும், கார்த்தியின் ஜப்பானும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 மே 2023, 7:19 am

DIN

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலானும், கார்த்தியின் ஜப்பானும் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மூன்று ஆண்டுகளான நிலையில், கிராபிக்ஸ் பணி காரணமாக வெளியிடுவதில் தாமதம் நீடித்து வந்தது.

அனைத்து பணிகளும் முடிவடையும் சூழலில் இருப்பதால், அயலான் படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்படும் என்று கடந்த மாதம் படக்குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ராஜ்முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்தாண்டு தீபாவளி அன்று கார்த்தியின் சர்தார் படமும், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படமும் மோதிக் கொண்டது. இதில், பிரின்ஸ் படத்தைவிட சர்தார் படத்துக்கு வரவேற்பு அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இந்தாண்டு தீபாவளிக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயனின் படங்கள் மோதவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.