யாஷிகாவின் சைத்ரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
யாஷிகா ஆனந்த் பேயாக நடிக்கும் சைத்ரா படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


யாஷிகா ஆனந்த் பேயாக நடிக்கும் சைத்ரா படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துருவகங்கள் பதினாறு படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்த விபத்தில் சிக்கிய யாஷிகா, ஆபத்தான நிலையிலிருந்து மீண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், கே. மனோகரனின் ‘மார்ஸ் புரோடக்ஷன்’ தயாரிப்பில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சைத்ரா’ திரைப்படம் வரும் நவ.17 ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தினை எம். ஜெனித்குமார் எழுதி, இயக்குகிறார். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்துக்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் ஷாருக்கானின் டன்கி டீசர்!
சைத்ரா திரைப்படம் 24 மணி நேரத்தில் நடைபெறும் திரில்லர் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...