சித்தா: ஓடிடி அறிவிப்பு!

சித்தா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
சித்தா: ஓடிடி அறிவிப்பு!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்,  நிமிஷா சஜயன் நடிப்பில் ‘சித்தா’ படம் வெளியானது. 

குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘சித்தா’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. 

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. 

சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் நவ.17ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com