பிக் பாஸ் நிகழ்ச்சியில் சைரன் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படம் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
தொடர்ந்து அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
இப்படத்தின் பூஜை சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் நாயகிகளான கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஜெயம் ரவியின் சைரன் படத்தின் சிறப்பு விடியோ வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.
கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் சைரன் படத்தை அந்தோணி பாக்யராஜ் எழுதி இயக்குகிறார்.
இதையும் படிக்க: சலார் டிரைலர் அறிவிப்பு!
இந்த நிலையில், சைரன் படத்தின் டீசரை, இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு

அபிராமி அம்மன் கோயில் தேரோட்டம்

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் நெடுஞ்செழியன், கண்ணகி சிலைகள் அமைக்கக் கோரி வழக்கு!

4-ஆம் காலாண்டு லாபம் இந்தியன் வங்கி 5% வளா்ச்சி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


