நீண்ட நாள்களாக காதலித்துவந்த நடிகர் சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா என்ற மகனும் , தேவ் என்ற மகளும் இருக்கிறார்கள்.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கங்குவா படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளுக்காக நடிகர் சூர்யா உடல் எடையைக் கூட்டுவதற்காக உடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிக்க: ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?
நடிகை ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்திருந்தார். அக்கா - தம்பியின் உறவைக் குறித்து உருவான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: சென்னை திரும்பினார் நடிகர் விஜய்!
நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து ’காதல்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதிகா உடற்பயிற்சி மையத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட விடியோ வைரலானது.
1.jpeg)
இதையும் படிக்க: இயக்குநர்களின் பாராட்டு மழையில் ஜிகர்தண்டா!
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதலர்கள் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியான வாழ்க்கைய வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி பொண்டாட்டி” எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு 2 மணி நேரத்தில் 6 இலட்சத்துக்கும் அதிகமான லைக் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெகவின் முதன்மைச் செய்தித் தொடா்பாளா்களாக அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல் குமாா், ஆ.ராஜ்மோகன்

யு-17 உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 13 பதக்கம்

சென்னை விமான நிலையத்தில் பணிகள் முடிந்தும் திறக்கப்படாத பயணிகள் ஓய்வுக் கூடம்!

4.8.1976: த.நா. நகர நில உச்சவரம்பு சட்டம் அமலுக்கு வந்தது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



