விமர்சனங்களை முடக்கினால் திரைப்படத் துறையை காப்பாற்றிவிட முடியுமா?: மம்மூட்டி ஆவேசம்! 

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சினிமா விமர்சன சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 
விமர்சனங்களை முடக்கினால் திரைப்படத் துறையை காப்பாற்றிவிட முடியுமா?: மம்மூட்டி ஆவேசம்! 

மம்மூட்டி-ஜோதிகா இணைந்து நடித்துள்ள படத்திற்கு ‘காதல் தி கோர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவகியுள்ள இப்படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். 

ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

சமீபத்தில் எர்ணாகுளம் காவல்துறையினர் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருவதாக இயக்குநர் (உபைனி இப்ராஹிம்) அளித்த புகாரின் பேரில் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மம்மூட்டி, “படத்தின் விமர்சனங்களை பொறுத்து அதன் வசூல் அமைவதில்லை. விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும் சினிமா ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மக்களுக்கு தாங்கள் பார்க்கும் படங்களின் மீது தனிப்பட்ட கருத்து இருக்க வேண்டும். சினிமா விமர்சனங்களை முடக்கி விட்டால் திரைப்படத் துறையை காப்பற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. மேலும் விமர்சனம் என்பது வேறு; கிண்டல் செய்வது என்பது வேறு” எனக் கூறியுள்ளார். 

காதல் தி கோர் படம் வரும் நவ.23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com