டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

லியோ ஓடிடி வெளியீட்டு தேதி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2023, 5:03 am

DIN

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Story image

இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ.24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.