மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கங்குவா படப்பிடிப்பில் விபத்து: உயிர் தப்பிய சூர்யா!

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2023, 7:40 am

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன.

தற்போது சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

சூர்யாவின் சண்டைக் காட்சிகள் இன்று காலை படமாக்கப்பட்ட போது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சூர்யா நூலிழையில் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | 38 மொழிகளில் கங்குவா!

மேலும், சூர்யாவின் தோல்பட்டையில் லேசாக கேமிரா மோதியதாகவும், படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து இரண்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.