டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓடிடியில் லியோ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 நவம்பர் 2023, 7:02 am

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல்ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான முதல்நாளிலேயே ரூ.148 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Story image

இந்நிலையில், இன்று இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.