கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :28 நவம்பர் 2023, 1:13 pm

DIN

இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை லோகேஷ் இயக்கியிருந்தார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ,லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார். 

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதை தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Story image

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய்குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். நாளை (நவ.29) மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Story image

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய்குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.