ரிச்சர்ட் - யாஷிகா ஆனந்தின் புதிய படம்!

வினய் பரத்வாஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் நடிகை யாஷிகா ஆனந்தும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ரிச்சர்ட் - யாஷிகா ஆனந்தின் புதிய படம்!

வினய் பரத்வாஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியும் நடிகை யாஷிகா ஆனந்தும் இணைந்துள்ளனர்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவர் நடிகர் அஜித்குமாரின் மைத்துனர். 

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த, பிக்பாஸ் மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்தும் ரிச்சர்ட் ரிஷியும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இருந்த புகைப்படங்கள் வைரலாகின. ஆனால், படத்துக்கான புரமோஷன் என்று ரிச்சர்ட் விளக்கம் அளித்திருந்தார். 

இந்நிலையில் வினய் பரத்வாஜ் இயக்கும் ஒரு படத்தில் இவர்கள் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

வினய் பரத்வாஜ், கன்னடத்தில் முதினா நில்தானா(Mudina Nildana) படத்தை இயக்கியவர், காஃபி ஷாட்ஸ் என்ற வெப் சீரிஸையும் இயக்கியுள்ளார். 

படம் குறித்து இயக்குநர், 'ரிச்சர்ட் ரிஷி, யாஷிகா ஆனந்த், 'புன்னகை பூ' கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'சில நொடிகளில்'  படம் திருமணமான தம்பதியரின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் த்ரில்லர் கதை. லண்டனில் படப்பிடிப்பு முடிந்து தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அழகு அறுவை சிகிச்சை நிபுணராக ரிச்சர்டும் அவரது மனைவியாக கீதாவும், மாடலாக யாஷிகாவும் நடித்துள்ளனர். 

இதில் 5 பாடல்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர். ரோஹித் குல்கர்னி பின்னணி இசை அமைத்துள்ளார்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com