புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கமல் படத்துக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்?

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடிகர் கமல்ஹாசனின் புதிய திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2023, 8:15 am

DIN

இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 

இதற்காக, கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.

கமல்ஹாசன் இதற்காக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.  படம் ராணுவ பின்னணியில் உருவாக உள்ளதாகவும்  தகவல் வெளியாகியிருந்தது. 

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.