தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடிகர் ஜீவாவின் யாத்ரா 2: வெளியானது முக்கிய அப்டேட்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் யாத்ரா 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :7 அக்டோபர் 2023, 7:32 am

DIN

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ‘யாத்ரா’. மஹி வி ராகவ் இயக்கிய இப்படத்தில் ஒய்.எஸ்.ஆர். கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். 

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மஹி வி ராகவ் இயக்க உள்ளார். இதில், ஒய்.எஸ்.ஆர். மகனும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியது. நடிகர் ஜீவா தமிழில் முன்னணி கதாநாயகனாக இருந்தாலும் சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய தோல்விகளையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்நிலையில் படத்தின் முதல்பார்வை போஸ்டர் அக்.9ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.