சக போட்டியாளரை மிரட்டிய விஜய்: மஞ்சள் கார்டு கொடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சக போட்டியாளரை மிரட்டிய விஜய் வர்மாவுக்கு மஞ்சள் கார்டு கொடுத்துள்ளார் கமல்.
சக போட்டியாளரை மிரட்டிய விஜய்: மஞ்சள் கார்டு கொடுத்த கமல்!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சக போட்டியாளரை மிரட்டிய விஜய் வர்மாவுக்கு மஞ்சள் கார்டு கொடுத்துள்ளார் கமல்.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் அல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டை ஆரம்பித்தது.

இந்த வாரம் வீட்டின் கேப்டன் விஜய், விசித்திரா, பிரதீப் ஆண்டனியின் சர்ச்சை கருத்தும், பவா செல்லத்துரையின் கதையும் சக போட்டியாளர்களின் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கிடையே, ரவீனா, ஐஷு, பிரதீப், ஜோவிகா, பவா செல்லத்துரை, யுகேந்திரன் மற்றும் அனன்யா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு மக்களின் வாக்கெடுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

சில நாள்களுக்கு முன்பு, "பிரதீப் ஆண்டனி என் மீது செருப்பு காலோடு உரசினார். அப்ப நான் கோபப்பட்டு அவருடைய முகத்தில் இடிச்சு இருந்தா, அவரோட முகம் உடைஞ்சு போய் இருக்கும். எனக்கு வெளியில பசங்க நிறைய பேரு இருங்காங்க." என மிரட்டும் விதமாக விஜய் வர்மா பேசி இருந்தார்.

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் விஜய் வர்மாவுக்கு மஞ்சள் கார்டை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். இந்த கார்டை மூன்று முறைக்கு மேல் வாங்கும் நபர் போட்டியில் வெளியேற்றப்படுவார் என்றும் கமல்ஹாசன் எச்சரித்துள்ளார்.

வழக்கமாக, வன்முறையை தூண்டுபவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து வந்த நிலையில் இந்த சீசனில் மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com