நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாநகரம் படத்துக்கு முன்பு எழுதிய கதையில்தான் ரஜினி நடிக்கிறார்: லோகேஷ் கனகராஜ் 

ரஜினிகாந்த 171 படம் குறித்து சுவாரசிய தகவலை கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

News image
Updated On :8 அக்டோபர் 2023, 10:15 am IST

ரஜினிகாந்த 171 படம் குறித்து சுவாரசிய தகவலை கூறியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது லோகேஷ் தலைவர் 171 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

Story image

இந்நிலையில் லியோ புரமோஷன் ஒன்றில் லோகேஷிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “மாநகரம் படத்துக்கு முன்பு எழுதிய கதை. இதில் எனது நண்பர் ஒருவர் நடிக்க இருந்தது. அந்தக் கதையில்தான் தற்போது ரஜினி சார் நடிக்கிறார். மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும்” எனக் கூறியுள்ளார். 
 

Story image

ரஜினிகாந்த தற்போது தா.சே. ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.