சென்னையில் மாநகராட்சி சாா்பில் உலக இசை தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) 15 மணி நேர மாரத்தான் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உலக இசை தினத்தை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை மாநகராட்சியும், ஆன் தி ஸ்ட்ரீட் இசை அமைப்பும் இணைந்து மாரத்தான் இசை நிகழ்ச்சியை நடத்துகின்றன. இசையின் பல்வேறு வடிவங்களையும், கலாசாரங்களையும் கொண்டாடும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பாண்டி பஜாரில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் இசை நிகழ்ச்சி, இரவு 10 மணி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது.
இதில், பழங்கால, திரைப்பட, நாட்டுப்புற, கா்நாடக, மேற்கத்திய, மெல்லிசை மற்றும் ஃப்யூஷன் உள்ளிட்ட பல்வேறு இசை வடிவங்கள் இடம் பெறவுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞா்கள், 20- க்கும் மேற்பட்ட இசைக் குழுக்கள் பங்கேற்று இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனா்.
இசை மூலம் மக்களிடையே ஒற்றுமை, மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










