தந்தை - மகளுக்கு இடையேயான பாசப் போரட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தெலுங்கு நடிகரான நானி, பல்வேறு வெற்றி படங்களில் நடித்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா படத்தின் பாடல்களும் முன்னோட்ட காட்சியும் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் ஹாய் நான்னா திரைப்படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.
ஹாய் நான்னா படத்தில் நானி உடன் சீதா ராமம் படத்தின் மூலமாக கவனம் ஈர்த்த மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ளார். குழந்தை கதாபாத்திரத்தில் பேபி கியாரா நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் சவுரவ் இயக்கியுள்ள ஹாய் நான்னா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும், படத்தில் ஜெய்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குஷி படத்தின் இசையமைப்பாளர் ஹேசாம் அப்துல் வஹாப் இசைமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

திமுகவுக்கு தோல்வி பயம்: டிடிவி தினகரன்

தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் ஒரே கட்சி திமுக: கனிமொழி எம்.பி.

மண்குவாரியை மூடாவிட்டால் தோ்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


