பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாபக்கல் டாஸ்க்கில், கூல் சுரேஷ்-க்கு சாபக்கல் கொடுக்கப்பட்டதால் பிக் பாஸ் வீடே ஒரே கலவரமாக மாறியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த சீசன்களை போல் இல்லாமல் இரண்டு வீடுகள், இரண்டு பிக் பாஸ் குரல்கள் என பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லாமல் உள்ளது.
முதல் வார முடிவில் மக்கள் குறைவாக வாக்களித்த அனன்யா வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, உடல்நிலை மற்றும் மனநிலை கருத்தில் கொண்டு பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டைவிட்டு தாமாக முன்வந்து வெளியேறினார்.
பவா செல்லத்துரை வெளியேறியதால், சென்ற வாரம் வெளியேற்றம் கிடையாது(No Elimination) என்ற அறிவிப்பை முன்னதாக நிகழ்ச்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் இன்று சாபக்கல் டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுக்கிறார். அதன்படி, பிக் பாஸ் கொடுக்கும் சாபக்கல் யாருக்கு செல்கிறதோ, அவர் சிறிய பாஸ்(Small Boss) வீட்டுக்கு செல்ல வேண்டும் மற்றும் அடுத்த வாரம் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார் எனத் தெரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் பெரும்பாலானோர் கூல் சுரேஷின் பெயர் சொன்னதால், உடனே கூல் சுரேஷ் கோபம் அடைந்து, ”நான் உங்களுக்கு இளிச்சவாயனா" என்று கேட்கிறார்.
அனைவரும் கூல் சுரேஷை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். இதனால் பிக் பாஸ் வீடே ஒரே கலவரமாக மாறியுள்ளது. இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை செய்திகள் - நேரலை

அன்றும் இன்றும் என்றும்! MLA காமராஜால் பேரவையில் சிரிப்பலை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8,560 அதிரடி உயர்வு!

நம்பிக்கை கோரும் தீர்மானம்! முன்மொழிந்த முதல்வர் விஜய்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

