தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பெரும் ஆதரவுக்கு நன்றி: மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சி! 

லியோ படத்தில் நடித்ததுக்காக ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெறும் நடிகை மடோனா செபாஸ்டியன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :21 அக்டோபர் 2023, 4:45 pm IST

பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றவரும் ஆவார்.  தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் அது மேலும் கூடியது. பின்னர் அவர் நடித்த தமிழ்ப்படங்கள் எதுவும் சரியாக அமையவில்லை. 

Story image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வியாழக்கிழமை வெளியானது. ரசிகர்களிடம், இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

Story image

உலகளவில் 6000 திரைகளில் வெளியான லியோ முதல்நாள் வசூலாக ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Story image

லியோவில் நடிகை மடோனா செபாஸ்டியன் நடிப்பதாக ஆரம்பத்தில் பொய்யான தகவலாக இருந்த நிலையில் அவர் நிஜமாகவே நடித்திருப்பது ரசிர்களுக்கு விருந்தாக இருந்தது. குறைவான நேரம் இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான கதாபாத்திரமாக நடித்திருந்தார். 

Story image

பெரும் ஆதரவினை தொடர்ந்து நடிகை மடோனா செபாஸ்டியன் தனது எக்ஸ் பதிவில், “லியோவுக்காக எனக்கு வரும் அதீத பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்த அற்புதமான அனுபவத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.