ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், தமிழிசை, ஓபிஎஸ்!

ரஜினி வீட்டில் துர்கா ஸ்டாலின், தமிழிசை, ஓபிஎஸ்!

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தமிழிசை செளந்தரராஜன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் தமிழிசை செளந்தரராஜன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம் 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை நேற்றுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

ரஜினிகாந்தின் மனைவி லதாவின் அழைப்பை ஏற்று ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கொண்டாட்டத்தில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை செல்வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தயார் ஷோபா சந்திரசேகர், பழம்பெரும் நடிகை லதா, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுள்ளதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. ரஜினியின் மனைவியும், அவரது மகள்கள் மற்றும் பேரன்கள் இந்த விழாவுக்கு வந்தவர்களை வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com