வைல்டு கார்டில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பட்டிமன்ற பேச்சாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைல்டு கார்டில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் பட்டிமன்ற பேச்சாளர்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே முதல் வார எவிக்‌ஷனில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும், சென்ற வாரம் விஜய் வர்மாவும்  வெளியேறியுள்ளனர்.

கடந்த சீசன்களை போல் இல்லாமல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால்  இரு வீட்டாருக்கு இடையே எப்போதும் சண்டையும், வாக்குவாதமும்  ஏற்பட்டவாறே உள்ளது.

அன்ன பாரதி.
அன்ன பாரதி.

பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டில் 5 பேர் செல்லவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்ன பாரதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். மதுரை முத்துவின் பட்டிமன்றக் குழுவில் பேசி பிரபலமானவர். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இதனிடையே, பிரபல பாடகர் கானா பாலா மற்றும் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டில் செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், வரும் அக்.29 ஆம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்கள் குறித்த தகவல் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com