மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஜினி 170 - வழக்கறிஞராக அமிதாப் பச்சன்?

ரஜினியின் 170-வது படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 அக்டோபர் 2023, 9:42 am

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்றது. தற்போது, மும்பையில் நடந்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

படப்பிடிப்பில் நடிகர்கள் ரஜினியும் அமிதாப் பச்சனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தில் அமிதாப் பச்சன் வழக்கறிஞராக நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.