ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குஷி திரைப்பட வெற்றி விழாவை நேரலையில் பார்க்கலாம்: படக்குழு அறிவிப்பு 

நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்து வெளியாகியுள்ள குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

News image
Updated On :4 செப்டம்பர் 2023, 10:58 am

DIN

நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் நடித்து வெளியாகியுள்ள குஷி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றன. 

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த குஷி படத்தை ஷிவ நிர்வாணா இயக்கியுள்ளார். யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். 
 
இதையும் படிக்க: ஜவான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குறித்து பேசிய காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?: ரசிகர்கள் கொந்தளிப்பு!

Story image

ஷிவ நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செப்.1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியானது.

காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும் தமிழில் கலவையான விமர்சனமும் பெற்றுவருகிற குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Story image

இந்நிலையில் இன்று (செப்.4) மாலை 6 மணிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் யூடியூப் பக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தை நேரலையில் பார்க்கலாம் என படக்குழு அறிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.