தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
என்றென்றும் புன்னகையின் இயக்குநர் ஐ. அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.
மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இறுதிக்கட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் செப்.28 ஆம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. சைக்கோ கில்லர் கிரைம் பாணியில் உருவான இப்படத்தின் டிரைலர் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இதில் வில்லனாக நடித்துள்ள நடிகர் ராகுல் போஸின் காட்சிகள் பின்னணி இசையில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கச்சிதமாக எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ஜவானில் விஜய் இருக்கிறாரா? - சண்டைப் பயிற்சியாளர் சொன்ன தகவல்!
மேலும், இக்கதாபாத்திரத்திற்கு ‘ஸ்மைலி கில்லர் பிரம்மா’ என இயக்குநர் பெயரிட்டிருப்பதும் ஆவலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனால், இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெரும் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேற்காசிய போா்: 5,500-க்கும மேற்பட்ட இந்திய விமானங்கள் ரத்து

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்: மேலும் இரு விமான சேவைகளும் நிறுத்தம்

10 கிலோ கஞ்சா, 50 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது

பாலியல் புகாரில் சிக்கிய கமாண்டண்ட்டுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் எஸ்ஐ பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

