வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

விஜய் சேதுபதியின் 50வது படம்! செப். 10-ல் முதல் பார்வை!

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படமாக உருவாகவுள்ள ‘மகாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 4:02 pm

DIN

விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படமாக உருவாகவுள்ள ‘மகாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் 50வது படமாக மகாராஜா உருவாகவுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.