நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் 106வது படம்! 

நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் பிறந்தநாளில் அவரது 106வது படம் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. 
நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் 106வது படம்! 
Updated on
2 min read

20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் சாதனையாளராக திகழ்ந்து வரும் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர். 

கன்னடத்தில் இயக்குநர் பாலசந்தர் படத்தின் மூலம் அறிமுகமான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 6 படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசனுடன் சேர்ந்து இவரது படைப்புகள் அனைத்தும் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்கது. 

இவரது 100வது படம் புஷ்பக விமானம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் காப்பியடிக்கப்பட்டதாக சில சர்ச்சைகள் உருவானது. 

ஷெர்லாக்ஹோம்ஸ் கதாபாத்திரங்களில் இவரும் இயக்குநர் ஸ்ரீவஸ்டாவும் இணைந்து 2 படங்களை எடுத்துள்ளார்கள். சிவாஜி சுரதகல் 1, 2 ஆகிய படங்கள் இயக்கிய இதே இயக்குநருடன் ரமேஷ் அரவிந்த் 3வது முறையாக இணைந்துள்ளார். 

படத்தின் பெயர் ‘டைஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபலமான ஜோக்கர் கதாபாத்திரம் போன்று மேக்கப் போடப்பட்டுள்ளது. ரமேஷ் அரவிந்தின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடிக்கும் 106வது படமாக இந்த டெய்ஜியின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நிச்சயமாக இதுவும் த்ரில்லர் கதையாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com