இந்தியன் - 2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.
இதற்காக, கமல் - வினோத் கூட்டணியில் உருவாகும் கமல் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நெஷனல் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள காட்சிகள் இது அரசியல் படமென்பதைக் உறுதிசெய்கின்றன. முன்னதாக, விவசாய சங்க நிர்வாகிகளுடன் கமல் மற்றும் வினோத் ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் வெளியானதால் இப்படம் விவசாயிகளின் பிரச்னையைக் கொண்டு உருவாக இருக்கிறது என தகவல் பரவியது.
இதையும் படிக்க: ஜேசன் சஞ்சய் படத்தின் இசையமைப்பாளர் இவரா?
தற்போது, கமல்ஹாசன் இதற்காக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத துவக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல் - 233 படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஜெயம் ரவியும் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!
அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! ஸ்பீக்கர் ஒலிக்குத் தடை! முக்கிய அறிவிப்பு

நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும்! திருச்சி சிவா
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


