மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசிய எஸ்.ஜே. சூர்யா!

நடிகர் எஸ்.ஜே. சூர்யா மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் செய்துள்ளதாக கூறியுள்ளார். 

News image
Updated On :17 செப்டம்பர் 2023, 6:28 am

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே. சூர்யா 5 குரல் மாற்றங்களில் பேசியிருப்பார். அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரம் பல்வேறு காலகட்டங்களில் வருவதற்கு ஏற்ப பேசி அசத்தியிருப்பார். 

நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.ஜே. சூர்யா, “தமிழில் 12 நாள்களும் தெலுங்கில் 13 நாள்களுமாக மொத்தம் மார்க் ஆண்டனி படத்துக்காக 25 நாள்கள் டப்பிங் பேசியுள்ளேன். ஏனெனில் படத்துக்கு அவ்வளவு தேவைப்பட்டது. அதற்கான வரவேற்பும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.