தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கமல் 234: இயக்குநர் மணிரத்னமிடம் அப்டேட் கேட்ட லோகேஷ்! 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் படத்தின் அப்டேட்டினை கேட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். 

News image
Updated On :17 செப்டம்பர் 2023, 7:50 am

DIN

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமலுக்கான மார்கெட் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியன் -2க்குப் பிறகு கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.  

ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜிடம் லியோ அப்டேட் கேட்டுக்கொண்டிருக்கும்போது லோகேஷ் மணிரத்னமிடம்  கமல் 234 படத்தின் அப்டேட்டினை கேட்டுள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Story image

இந்நிலையில் சைமா விருது விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் மணிரத்னமிடம் கமல் 234 பட அப்டேட்டினை கேட்டார். அதற்கு மணிரத்னம், “தயாரிப்பாளரிடம் கேளுங்கள்”என்றார். 

பிறகு கமல், “ஒரு நிஜமான ரசிகன்  என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார். எந்தப் பதட்டமும் இல்லாமல் நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் பார்த்து வருகிறோம். உங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடிக்கூட அதற்காகதான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம்” எனக் கூறினார். 

ரசிகர்கள் லோகேஷிடம் லியோ அப்டேட்  கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.