ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மார்க் ஆண்டனி வெற்றியை அஜித் சாருக்கு சமர்பிக்கிறேன்: ஆதிக் ரவிச்சந்திரன்

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

News image
Updated On :21 செப்டம்பர் 2023, 12:33 pm

DIN

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

செப்.15ஆம் தேதி வெளியான மார்க் ஆண்டனி படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.62.11 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.

Story image

இந்நிலையில், இன்று படத்தின் வெற்றிவிழாவில் பங்கேற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின்போது அஜித் சாரை சந்தித்தபோது, ‘உன்னால் முடியும். நீ பெரிய படத்தை இயக்கு’ என நம்பிக்கை அளித்தது அவர்தான். மார்க் ஆண்டனியின் வெற்றியை அஜித் சாருக்கு சமர்பிக்கிறேன்” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.