தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 7:40 am

DIN

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து அவர் இயக்கத்தில் நடிப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளப் பதிவில், “என்னுடைய 23வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன கதை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன்.

இந்தப் படம் எல்லாவிதத்திலும் எனக்கு முக்கியமான படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இன்னும் என்னால் காத்திருக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.