சந்திரமுகி-2 திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ் வாழ்த்து பெற்றார்.
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இரண்டாவது பாகத்தில் கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சமீபத்தில் ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.
சந்திரமுகி 2-ஆம் பாகத்தின் டிரைலர்கள் சமீபத்தில் வெளியான நிலையில், நாளை மறுநாள்(செப்.28) திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | அனிமல் டீசர் குறித்த புதிய அப்டேட்!
இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக முதல் பாகத்தில் நடித்த ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்ற லாரன்ஸ், அவரிடம் வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த லாரன்ஸ், குருவே சரணம் எனவும், ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்தும், சந்திரமுகி-2 வெளியீட்டுக்கு ஆசியும் பெற்றதாக பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தோ்தல் தொடா்பான அனைத்து ஊடக செய்திகளும் கண்காணிக்கப்படும்: மாவட்ட தோ்தல் அலுவலா்

மாநில அளவிலான சிலம்பம்: சாத்தான்குளம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரமலான் மாத சிறப்புத் தொழுகை

தியாகராஜநகரில் காா் தீக்கிரை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

