
பிரபல சீரியல் நடிகரான புவியரசுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் இதயம் மற்றும் வித்யா நம்பவர் 1 தொடரில் நடித்து வருபவர் நடிகர் புவியரசு. இவர் பல முன்னனி தொடர்களில் நடித்து அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.
தொடர்ந்து, தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மோஹனபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
சமீபத்தில், இவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில், மெட்டர்னடி போட்டோ ஷூட்டில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், நடிகர் புவியரசு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "உன்னுடைய பிஞ்சு விரலை என்னிடத்தில் வைத்திருப்பது போல், விலைமதிப்பானது எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர் சித்தார்த்: வைரல் விடியோ!
இந்த நெகிழ்ச்சியான பதிவுக்கு, புவியரசு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.